இலங்கையில் வருவாய் திரட்டலைத் தொடர்ச்சியாகப் பேணுவதுடன், வரி அமைப்பின் செயல்திறன் மற்றும் நியாயத்தன்மையை மேம்படுத்தும் இடைக்கால வருவாய் மூலோபாயத்தை உருவாக்கி செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் எவான் பாபஜார்ஜியோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரச் சீரமைப்பின் ஒரு பகுதியாக, வரி முறையை மேலும் திறன்மிக்கதாகவும் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நீதி மற்றும் நியாயத்தை வழங்கக்கூடியதாகவும் மாற்றுவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் நாட்டின் வருவாய் ஈட்டும் திறனை தொடர்ந்து பேண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்து, வரி வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு வரி விலக்குகள் மற்றும் வரி ஊக்குவிப்புகளை மறுசீரமைத்து, அவசியமற்றவற்றை நீக்கி, அவற்றை நியாயமான முறையில் முறைப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.








