கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் செயற்பாடுகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன.
வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட வைத்தியசாலையின் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளில் வைத்தியசாலை ஊழியர்கள் ஈடுபட்டதுடன், சில மணித்தியாலங்களுக்குள் அப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
கொழும்பில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் நகரின் பல வீதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.








