காஸா மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் விரிவான திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான பாதைவரைபடத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளமைக்கு கட்டார் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஸா மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள விரிவான திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பாதைவரைபடத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு குறித்து கட்டார் பிரதமர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.








