ஹோர்முஸ் நீரிணையின் புதிய சட்டபூர்வ நிலை குறித்து ஈரானும் ஓமானும் இணைந்து முடிவு செய்யும் என ஈரான் தூதர் காசெம் ஜலாலி தெரிவித்துள்ளார்.
ஈரான் செய்தி நிறுவனமான ISNA வெளியிட்ட தகவலின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா தொடர்ந்து பயணிக்க விரும்பினால், ஈரானும் ஓமானும் தீர்மானிக்கும் அந்த நீரிணையின் புதிய சட்டபூர்வ நிலையை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என ஜலாலி குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று மாலை ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரின் (UNGA) பின்னணியில் அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.








