பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் குறித்து எகிப்து வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்துல்அத்தி, ஓமான் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அல் புசைதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, பதற்றத்தைத் தணித்தல், மீண்டும் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுத்தல் மற்றும் நெருக்கடிக்கு அரசியல் தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக எகிப்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.








