நாராஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் காணப்பட்ட அனைத்து தரவுகளும் வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கணினி நிபுணர்கள் குழுவினால் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸாரின் கூற்றுப்படி, இந்தச் செயற்பாட்டை நிறைவு செய்வதற்கு 24 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் எடுத்துள்ளது.இதன்போது, குறித்த கணினி அமைப்பின் உள்நாட்டுத் தரவுத் தொகுதிக்குள் பிரவேசித்து, அங்கிருந்த அனைத்து தரவுகளையும் பாதுகாப்பான முறையில் பதிவு செய்ய நிபுணர்கள் குழுவால் முடிந்துள்ளது.
இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் விரிவான மற்றும் ஆழமான ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் காணப்பட்ட சில தரவுகள், அந்த அமைப்பிற்குள்ளேயே மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கணினி அமைப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் தரவு மாற்றங்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை இந்த ஆய்வின் மூலம் எதிர்காலத்தில் வெளிக்கொணர முடியும் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.








