அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது முன்னெடுத்து வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாயியை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மொஸ்கோவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் கடிதம் ஒன்றையும் மொஹ்சென் ரெசாயி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினிடம் கையளித்துள்ளதாக ஈரானின் அரச ஊடகமான பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.குறித்த சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








