2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு டிசம்பர் 02ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த திகதி முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள், பாடரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








