துறைமுக அணுகல் மேல் மட்ட அதிவேக நெடுஞ்சாலை ஊடாகப் பயணிக்கும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த அதிவேக நெடுஞ்சாலை ஊடாகத் துறைமுக நுழைவாயில் வீதிக்குள் பிரவேசிக்க, துறைமுகத்துக்குள் நுழைவதற்கான உத்தியோகபூர்வ அனுமதிப்பத்திரம் கொண்ட வாகனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) அறிவித்துள்ளது.
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








