ஈரானுக்கு தடைகள் தளர்வு மற்றும் முடக்கப்பட்ட நிதிகளை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்க அமெரிக்க நிர்வாகம் முன்வந்ததாக வெளியான செய்தியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார்.
இந்த செய்தி “புரளி” என ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கத்தார் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவுடன் மேலும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில், அமெரிக்காவின் உத்தியோகபூர்வ பதில் செவ்வாய்க்கிழமை கிடைக்கும் என “நம்புகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வார இறுதியில் வளைகுடா நாட்டிற்கு மேற்கொண்ட பயணத்தின்போது ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்ததை ஐக்கிய அரபு அமீரகம் உறுதிப்படுத்தியுள்ளது.








