1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 11 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் இந்த விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த தெரிவுக்குழு தொடர்பில் இன்று (28) நாடாளுமன்றத்தில் அறிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, கறுப்பு ஜூலை சம்பவத்தின் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதே இக்குழுவின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார்.
அத்துடன், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதும் இக்குழுவின் பொறுப்பாகும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.








