தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரண்டு இலங்கையர்களின் அடையாளங்களை சியோலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் சடலங்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ரன்வல, கொடகவெல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய தெஹிபிட்டிய விதானலாகே அனில் குமார விஜேரத்ன மற்றும் வலப்பனை, ஹல்கரனோயா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மகேஸ்வரன் பிரசாந்தன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் ‘ஹ்வாசியோங் சியோபு’ (Hwaseong Seobu) பொலிஸ் நிலையம், நேற்று (27) சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வாகன விபத்து நேற்று முன்தினம் (26) இரவு ஜங்கான்-மியோன் (Jangan-myeon) பகுதியில் இடம்பெற்றுள்ளது.








