கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2 வயது, 6 வயதுடைய அவர்களது இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் மின்சாதன உபகரண விற்பனை நிலையம் அமைந்துள்ளதுடன், உயிரிழந்த குடும்பத்தினர் மேல் மாடியில் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோட்டே தீயணைப்புப் பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீ பரவலுக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







