யாழ்ப்பாணத்தின் காற்றின் தரக் குறியீடு 200 என்ற எல்லையைத் தாண்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.
இன்று (19) காலை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையை எட்டியுள்ளது.
இதற்கமைய, இன்று காலை 7.05 மணியளவில் பத்தரமுல்லையில் 179 ஆகவும், கிளிநொச்சியில் 158 ஆகவும், அநுராதபுரத்தில் 158 ஆகவும், திருகோணமலையில் 151 ஆகவும், சிலாபத்தில் 165 ஆகவும் காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.
குறித்த பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய மட்டத்தில் காணப்படுவதால், பொதுமக்களுக்கு சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால், சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை பாதிப்புகள் உள்ளவர்கள் KN95 ரக முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், திறந்தவெளிகளில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








