ஈரானுடனான போர் “மிக விரைவில்” முடிவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், போர் எவ்வாறு அல்லது எப்போது முடிவடையும் என்பது தொடர்பில் அவர் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை. அதேவேளை, ஈரான் அணு ஆயுதத்தைப் பெற அனுமதிக்கப்படாது என்றும் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் இடைக்காலத் தேர்தல்களை முன்னிட்டு அமெரிக்க வாக்காளர்களுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் என அமெரிக்க வாக்காளர்களுக்கு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் போர் தொடங்குவதற்கு முன்னரிருந்த மட்டத்தை நெருங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 13.2 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஹோர்முஸ் நீரிணை ஊடாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக Kpler நிறுவனம் தெரிவித்துள்ளது.







