பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது காரில் வந்த குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த குற்றச்செயலுக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 23 வயதுடைய சந்தேகநபர் நேற்று (29) இரவு ஹல்பாதோட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹவத்த பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் பத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.அவர் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.சம்பவம் தொடர்பில் பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








