இலங்கை மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8.75 சதவீதமாக தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தொடர்ந்தும் நிலவும் பதற்றம் மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.








