தேசிய லொத்தர் சபை (NLB), 2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டிப் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
லொத்தர் சீட்டு விற்பனை மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 60 பில்லியன் ரூபாவைத் தாண்டும் என தேசிய லொத்தர் சபை எதிர்பார்க்கிறது.
இந்தச் சிறப்பான செயல்திறன் மற்றும் வருமான வளர்ச்சிக்கு ஊழியர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், 2025ஆம் ஆண்டுக்காக தேசிய லொத்தர் சபை ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்திற்குச் சமமான ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய வணிகச் சிறப்பு விருது விழாவில் தேசிய லொத்தர் சபை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் வகையில், தமது முயற்சிகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்தும் ஆதரவளிக்க வேண்டும் என தேசிய லொத்தர் சபை அழைப்பு விடுத்துள்ளது.








