ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (12) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்துடன் அநுராதபுர புனித பூமியின் அபிவிருத்தித் திட்டத்தை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் நேற்று (11) இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் எவ்வித உணவோ அல்லது நீராகாரமோ உட்கொள்ளாமல் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று இரவும் போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்ற ஏனைய தேரர்கள் மற்றும் பொதுமக்கள், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.








