யெமனின் தைஸ் மாகாணத்தில் சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இரு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக ஹூதிகள் நடத்தும் அல்-மஸீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
தென்மேற்கு தைஸ் மாகாணத்தின் துபாப் மற்றும் மக்பானா மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி அல்-மஸீரா தெரிவித்துள்ளது.
இதனிடையே, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யெமன் அரசாங்கத்துடன் இணைந்த ஆயுதப் படைகள், ஹூதிகளிடமிருந்து சில நிலைகளை மீட்டெடுத்து மாகாணத்திற்குள் முன்னேறி வருகின்றன.இதனால், அப்பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.








