இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க இன்று (15) காலை நாட்டை வந்தடைந்தார்.
அவர் விமானம் மூலம் கொண்டுவந்த 5 ஈட்டிகளும் சந்தேகத்திற்கிடமான முறையில் உடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்கேரியின் புடாபெஸ்டில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்த ஈட்டி மற்றும் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் 92.07 மீற்றர் தூரம் எறிந்த ஈட்டி உள்ளிட்ட அவர் பயன்படுத்திய 5 ஈட்டிகளுமே சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்டிமேட் மற்றும் டைமண்ட் லீக் ஆகிய இரண்டு சம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்ற ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை 5.10 மணியளவில் துருக்கிய ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான TK-730 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.







