அப்ரா அன்சார்
கொழும்பு; இஸ்ரேலின் போருக்கு மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், காஸா முழுவதும் ஏற்பட்டுள்ள பேரழிவின் அளவை புதுப்பிக்கப்பட்ட Google Maps செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
காஸாவின் பல பகுதிகளில் குடியிருப்புகள் முற்றாக இடிந்து தரைமட்டமாகியுள்ளதுடன், பிரதான வீதிகளின் மங்கலான தடயங்கள் மட்டுமே காணப்படுகின்றன.
விவசாய நிலங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், பல நூற்றாண்டுகள் பழமையான வழிபாட்டுத் தலங்களும் சேதமடைந்துள்ளன அல்லது முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கைக்கோள் நிலையமான UNOSAT மேற்கொண்ட சமீபத்திய மதிப்பீட்டின்படி, சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அமுலுக்கு வந்த போர்நிறுத்தத்திற்குப் பின்னரும் காஸாவில் அழிக்கப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
காஸாவில் உள்ள சுமார் 82 சதவீத கட்டடங்கள், அதாவது சுமார் 2 இலட்சம் கட்டடங்கள், சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பான UNRWA தெரிவித்துள்ளது.
(Al Jazeera)







