செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மனித குலத்தின் மதிப்புகளை பாதிக்கும் அபாயம் உள்ளதாக போப் லியோ XIV எச்சரித்துள்ளார்.
பிரான்ஸுக்கான தனது முதல் அரச முறைப் பயணத்தின் போது உரையாற்றிய அவர், கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி “இயந்திரங்களின் சொர்க்கம்” போன்ற நிலையை உருவாக்கக்கூடும் எனக் குறிப்பிட்டார்.
அதேவேளை, அணு ஆயுதத் தடுப்பு கொள்கைக்கு எதிரான வத்திக்கானின் நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன், அந்தக் கொள்கை “தவறானது” எனத் தெரிவித்தார்.








