டித்வா சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், கடந்த நவம்பர் 26ஆம் திகதி பதுளையில் அமைந்துள்ள முதியங்கனை ரஜமஹா விகாரையில் விசேட பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பௌத்த மதகுருமார்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, அனர்த்தத்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவுகூரல் தபால் முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.
நிகழ்வைத் தொடர்ந்து இரவு முழுவதும் பிரித் பாராயணம் இடம்பெற்றதுடன், மறுநாள் காலை 100 பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.








