நாட்டின் 07 மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (27) இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று (28) பிற்பகல் 4 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முதலாம் கட்ட (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் வருமாறு:
பதுளை மாவட்டம்
- ஹல்துமுல்லை
- பசறை
களுத்துறை மாவட்டம்
- பாலிந்தநுவர
- புலத்சிங்கள
கண்டி மாவட்டம்
- யட்டிநுவர
- தும்பனை
- ஹதரலியத்த
- உடபளாத்த
- கங்க இஹல கோரளை
- உடுதும்பர
- தொலுவ
- உடுநுவர
கேகாலை மாவட்டம்
- அரநாயக்க
- ருவன்வெல்ல
- தெஹியோவிட்ட
- மாவனெல்லை
- புலத்கொஹுபிட்டிய
- கேகாலை
- கலிகமுவ
- யட்டியாந்தோட்டை
- ரம்புக்கனை
மாத்தளை மாவட்டம்
- ரத்தோட்டை
நுவரெலியா மாவட்டம்
- கொத்மலை கிழக்கு
- நில்தண்டாஹின்ன
- கொத்மலை மேற்கு
- நோர்வூட்
- அம்பகமுவ கோரளை
- தலவாக்கலை
- வலப்பனை
இரத்தினபுரி மாவட்டம்
- குருவிட்ட
- கிரியெல்ல
குறித்த பிரதேசங்களில் மலைச்சரிவுகளை அண்டி வாழும் மக்கள் மண்சரிவு, மண்மேடுகள் இடிந்து விழுதல், பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மண் சரிவுகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்து அவதானத்துடன் இருப்பதுடன், அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








