கொள்ளுப்பிட்டி பகுதியில் இயங்கும் CM06 மெட்ரோ பேருந்து சேவை எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (LMT) நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள நிறுவனம், பயணிகளின் புரிந்துணர்வுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த பேருந்து சேவை இடைநிறுத்தப்படுவதற்கான காரணம் மற்றும் மீண்டும் சேவை ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.








