ஹோர்முஸ் நீரிணைக்கு மேல் பறந்த அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட MQ-1 ஆளில்லா விமானத்தைத் தமது வான் பாதுகாப்புப் படைகள் “இடைமறித்து அழித்ததாக” ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
IRGC வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி ஈரானிய ஒளிபரப்பு நிறுவனமான IRIB இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
MQ-1 என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தொலைவிலிருந்து இயக்கப்படும் ஆளில்லா விமானமாகும். இது பெரும்பாலும் கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கூற்று தொடர்பாக அமெரிக்கா இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையின் நுழைவுப் பகுதியில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலைக் கைப்பற்றியதாகவும் IRGC கடற்படை தெரிவித்திருந்தது.








