ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கான ஈரானின் இராணுவத் தயார்நிலை, “பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மூலோபாயத் திட்டமிடலின் விளைவு” என ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழு உறுப்பினரும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள் பிரிகேடியர் ஜெனரலுமான இஸ்மாயில் கொசாரி தெரிவித்துள்ளார்.
ஈரானின் Student News Network ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் பேசிய கொசாரி, ஈரான்–ஈராக் போரின் இறுதி ஆண்டுகளிலிருந்தே, அப்பகுதியில் வெளிநாட்டு இராணுவப் பிரசன்னம் ஏற்பட்டால் அதற்கு விரைவாகப் பதிலளிப்பதற்காக, ஈரான் இராணுவமும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையும் தற்காப்பு நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கான திட்டங்களைத் தயாரித்து வந்ததாகக் குறிப்பிட்டார்.








