சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களில் இருந்து வரும் பொருட்களுடனான வர்த்தகத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க 12 நாடுகள் திட்டமிட்டுள்ளதற்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
“மேற்குக் கரையில் நிலவும் நிலைமையின் தீவிரத்தன்மை, அவசரமானதும் உறுதியானதுமான நடவடிக்கைகளை கோருகிறது,” என ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் பேச்சாளர் ஜெரமி லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை “மேற்குக் கரையில் நிலவும் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு” பங்களிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.









