தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு, தனது முதல் 200 நாட்களுக்குள் சுமார் 18.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது ‘வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் மாற்றத்திற்கான மாநாட்டில்’ 58,214 கோடி இந்திய ரூபா (சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான 78 புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் ஊடாக 25 மாவட்டங்களில் 65,786 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் விஜய் தலைமையிலான அரசாங்கம் இதுவரை 190 முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் சுமார் இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இலத்திரனியல், குறைக்கடத்திகள், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்த முதலீட்டு உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், இவை முதலீட்டு உறுதிமொழிகள் மட்டுமே என்பதுடன், உண்மையான முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை குறித்த திட்டங்களைச் செயற்படுத்துவதிலேயே தங்கியுள்ளன.