நில்வலா மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளை ஒட்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கடந்த 24ஆம் திகதி இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 24 மணித்தியாலங்களுக்கு அது நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அப்பகுதி வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.








