டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.
இதன்படி, கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையிலான ரயில் சேவைகளை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளிக்குப் பின்னர் மலையக மார்க்கத்தில் ரயில் சேவைகள் இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போது குறித்த மார்க்கத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








