இணையவழி பண மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, படுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெலிகிராம் குழுவொன்றின் ஊடாக இணையவழி வியாபாரத்தில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, சந்தேகநபர் மோசடிக்கு அனுசரணை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது, மொத்தமாக 542,877 ரூபாய் வைப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 66,999 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இணையவழி பண மோசடி தொடர்பாக 2024 பெப்ரவரி 10ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, சந்தேகநபரான பெண் நேற்று (18) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








