அப்ரா அன்சார்
கொழும்பு;உலகின் பல்வேறு நாடுகளில் காபியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 1ஆம் திகதி சர்வதேச காபி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
காலைப் பொழுதை உற்சாகமாகத் தொடங்குவதற்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கும் காபி உலகம் முழுவதும் பிரபலமான பானமாக இருந்து வருகிறது.
காபி ஒரு பானம் மட்டுமல்லாமல், உலகளாவிய பொருளாதாரத்துடன் தொடர்புடைய முக்கிய தொழில்துறையாகவும் விளங்குகிறது. மில்லியன் கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காபி உற்பத்தியைச் சார்ந்துள்ளது.
இந்நிலையில், காபி விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பது, நிலையான உற்பத்தியை ஊக்குவிப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது போன்ற விடயங்கள் தொடர்பிலும் சர்வதேச காபி தினம் கவனம் செலுத்துகிறது.
உலகின் பல்வேறு கலாசாரங்களையும் மக்களையும் ஒரு கப் காபி இணைக்கும் நிலையில், காபியின் பயணம் விவசாய நிலங்களிலிருந்து நமது கோப்பைகள் வரை தொடர்கிறது.




