எம்.எஸ்.எம்.ஸாகிர்
சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாணவத் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள் மற்றும் உதவி வகுப்புத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் கே.எல். அப்துல் ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனைக்குப் பொறுப்பான ஆசிரியர் மேஜர் எம். சிப்லி சம்சுதீன் நிகழ்வை ஒழுங்கமைத்து நெறிப்படுத்தினார்.
சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா ஏ. மலிக், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மேலும், 38ஆவது தேசிய மாணவர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கே.எம். தமீம், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.சி. இந்திக, அயல் பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர் எஸ்.எம். உவைஸ் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது புதிதாக நியமிக்கப்பட்ட மாணவத் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள் மற்றும் உதவி வகுப்புத் தலைவர்களுக்கு சின்னங்கள் சூட்டப்பட்டதுடன், மாணவத் தலைவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அத்துடன், மாணவத் தலைவர்கள் தமது பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் சேவை தொடர்பான உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.
மாணவர்களின் இசை அணிவகுப்பு, பொல்லடி, நடன நிகழ்ச்சிகள், வரவேற்பு நடனம் மற்றும் சிறப்பு உரைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலையின் ஒழுக்கக் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களிடையே தலைமைத்துவம், பொறுப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அமைந்திருந்தது.










