எம்.எஸ்.எம்.ஸாகிர்
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களான சஹிரியன் 97 ஓ.எல். மற்றும் 2000 ஏ.எல். பழைய மாணவர்களால் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு ஸ்மார்ட் வோட் மற்றும் 70 சப்பாத்துகள் என்பன அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர், சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.அஸ்மா மலிக், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர் டாக்டர் ஏ.எம்.பாறூக் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், முகாமைத்துவ குழுவினர் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது சஹ்ரியன் 97 ஓ.எல். 2000 ஏ.எல். பழைய மாணவர் அமைப்பின் தலைவர் எம்.எச்.எம். ஹனீப், உப தலைவர்களான எம்.பி.எம் .நௌஷாத், எஸ்.எம். நௌஷாத், கே.எம்.சதாத், ஒருங்கிணைப்பாளர் எம்.வை.எம். நயீம், செயலாளர்களான ஏ.சீ.எம். ரியால், ஏ.எம்.ஜலீல், நிர்வாக உத்தியோகத்தர்களான ரீ. சுபைதீன், ஏ.எச்.எம். இல்மியாஸ், ஊடக ஒருங்கிணைப்பாளர் எம்.எல்.எம். றஸீன் ஆகிய அனைவரும் இணைந்து இந்த மனிதாபிமான உதவியை தாங்கள் கற்ற தாய்ப் பாடசாலைக்கு வழங்கி வைத்தனர்.
இந்தப் பெறுமதியான மற்றும் முன்னுதாரணமான உதவியை மாணவர்களின் நலன் கருதி வழங்கியமைக்காக கல்லூரி அதிபரினால் 97 ஓ.எல். 2000 ஏ.எல். பழைய மாணவர் அமைப்பினர்
கல்லூரியினால் வழங்கப்படுகின்ற அதி உச்ச விருதான கோல்டன் ஸ்பொன்ஸர் (Golden Sponcer) விருது வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக்கு இன்னும் தேவைப்பாடுகள் உள்ளதாகவும் இப் பாடசாலையில் கற்ற பழைய மாணவர்கள் தங்களால் வழங்க முடியுமான உதவிகளை பாடசாலையின் நன்மை கருதி வழங்க முடியும் என கல்லூரியின் அதிபர் எம். ஐ. ஜாபிர் இதன்போது தெரிவித்தார்.










