மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் நேற்று (26) பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்று பிற்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
குறித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யுமாயின், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நீர்த்தேக்க அணைக்கட்டுக்குக் கீழ்ப்பகுதியில் கொத்மலை ஓயாவின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








