20ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐபிஎல் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அணிகள் தமது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுக்களில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக, சென்னை அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அணியின் பயிற்சியாளர் குழுவில் மேலும் பல மாற்றங்களை சென்னை அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகப் பணியாற்றிய மைக்கேல் ஹஸி விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த டொமி சிம்சக், கிரேக் கிங் மற்றும் ராஜீவ் குமார் ஆகியோரும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







