முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 81ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட முறையில் மஹிந்த ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, 1945 நவம்பர் 18ஆம் திகதி பிறந்தார். இன்று தனது 81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இவர் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி வகித்ததுடன், பின்னர் பிரதமராகவும் பணியாற்றியுள்ளார்.








