நூலக சேவையைப் பசுமைமயமாக்குவதுடன், நூலகக் கட்டமைப்பின் ஊடாக சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் சுற்றுச்சூழல் அறிவு, மனப்பான்மை மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் இலங்கை நூலக சங்கமும் இணைந்து இன்று (18) இந்த விசேட சுற்றுச்சூழல் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன.
நூலகர்களுக்காக நடத்தப்பட்ட இந்தச் செயலமர்வில் நாடளாவிய ரீதியில் இருந்து 100 இற்கும் மேற்பட்ட நூலகர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, தேசிய சுற்றுச்சூழல் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்தில் நூலகங்கள் ஊடாக ஆற்றக்கூடிய பங்களிப்பு, நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி நூலக சேவையைப் பசுமைமயமாக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.








