கொழும்பில் கெரமல் புடிங் (Caramel Pudding) இனிப்பை விரும்புவோர் மத்தியில் பிரபலமடைந்துள்ள ‘Caramello’ என்ற உள்ளூர் வர்த்தக முயற்சி, TikTok சமூக வலைத்தளத்தின் ஊடாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உள்நாட்டு வணிகங்களை ஊக்குவிக்கும் #ShopLocalWithTikTok முன்னெடுப்பின் ஊடாக, இலங்கையில் வளர்ந்து வரும் உள்ளூர் வர்த்தக முயற்சிகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக Caramello வர்த்தக முயற்சி அமைந்துள்ளது.
TikTok தளத்தில் கெரமல் புடிங் தொடர்பான காணொளிகள் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, அதனை ஒரு வர்த்தக வாய்ப்பாகக் கண்ட மொஹமட், தனது உறவினர் ஒருவரின் ஆதரவுடன் Caramello வணிகத்தை ஆரம்பித்துள்ளார்.
ஆரம்பத்தில் சிறிய அளவில் எவ்விதமான பெரிய எதிர்பார்ப்புகளுமின்றி இந்த வணிகத்தைத் தொடங்கியதாகவும், முதல் நாளிலிருந்தே கொழும்பு வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்ப்பைத் தாண்டிய வரவேற்புக் கிடைத்ததாகவும் மொஹமட் தெரிவித்துள்ளார்.
வெறுமனே சமூக வலைத்தளங்களில் பிரபலமடையும் ஒரு பொருளை விற்பனை செய்வதைத் தாண்டி, தமது தயாரிப்புகளை விரும்பும் விசுவாசமான வாடிக்கையாளர் சமூகத்தை உருவாக்குவதே தனது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Caramello வணிகத்தின் வளர்ச்சியில் TikTok முக்கிய பங்காற்றியுள்ளது. அதிகமானோர் ரசித்துப் பார்க்கக்கூடிய சுவாரசியமான காணொளிகளை உருவாக்குவதில் மொஹமட் கவனம் செலுத்தியுள்ளார்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் Caramello வண்டி அமைந்துள்ள இடம், திறந்திருக்கும் நேரம் மற்றும் ஓடர்கள் தொடர்பான விபரங்களை TikTok ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் காணொளிகளைப் பார்ப்பவர்களை நேரடி வாடிக்கையாளர்களாக மாற்றுவதும் சாத்தியமாகியுள்ளது.
பெரியளவிலான விளம்பரச் செலவுகள் இன்றி அதிகமான வாடிக்கையாளர்களைச் சென்றடைய TikTok சிறிய வர்த்தகங்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குவதாக மொஹமட் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் பிரபலத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவது அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு காணொளி வாடிக்கையாளரை முதல்முறையாக ஈர்க்கலாம். ஆனால், உணவின் தரமும் சுகாதாரமும் அவர்களை மீண்டும் வரவழைக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், வணிகத்தின் அன்றாடச் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டு, தயாரிப்புகளின் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் தமது அனுபவங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதும், மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பதும் வணிகத்தின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் Caramello வணிகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு மொஹமட் திட்டமிட்டுள்ளார். மேலதிக விற்பனை நிலையங்களை ஆரம்பித்தல், கூடுதல் நாட்களில் சேவைகளை முன்னெடுத்தல் மற்றும் நீண்ட நேரம் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்து வருகின்றன.
இதற்கமைய, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் வணிகத்தை விரிவுபடுத்துவது குறித்தும் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.
அத்துடன், வாடிக்கையாளர்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருப்பதற்கும், தமது வணிகப் பயணத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் TikTok உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து பயன்படுத்தவுள்ளதாக மொஹமட் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறிய உள்ளூர் முயற்சியும் சரியான சமூக வலைத்தளத் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகரமான வர்த்தக நாமமாக வளர்ச்சியடைய முடியும் என்பதற்கு Caramello ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.









