அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, இலங்கையின் முக்கிய வர்த்தக வங்கிகளில் இன்று (18) செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 336 ரூபாய் முதல் 337 ரூபாய் வரையான மட்டத்தில் பதிவாகியுள்ளது.
Seylan வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.50 ரூபாயாகவும், விற்பனை விலை 337.75 ரூபாயாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
NDB வங்கியில் கொள்வனவு விலை 328.30 ரூபாயிலிருந்து 328.20 ரூபாயாகவும், விற்பனை விலை 337.30 ரூபாயிலிருந்து 337.20 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
People’s வங்கியில் கொள்வனவு விலை 328.65 ரூபாயாகவும், விற்பனை விலை 336.80 ரூபாயாகவும் மாற்றமின்றிப் பதிவாகியுள்ளது.
Commercial வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.77 ரூபாயாகவும், விற்பனை விலை 336.70 ரூபாயாகவும் காணப்படுகிறது.
அதேபோல், Sampath வங்கியில் கொள்வனவு விலை 328.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336.75 ரூபாயாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.








