பயணக் கொடுப்பனவை அதிகரிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, 10.08.2026 மற்றும் 11.08.2026 ஆகிய இரு தினங்களிலும் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
2024ஆம் ஆண்டு, குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீற்றர் எரிபொருளுக்கு இணையான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த போதிலும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக நந்தன ரணசிங்க குறிப்பிட்டார்.இதன்படி, குறித்த தொழிற்சங்க நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.









