பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரின் வனப்பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் ஹெலிகொப்டரின் விமானி மற்றும் அதில் பயணித்த மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த மூன்று பயணிகளும் கொலம்பியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வான்வழிச் சுற்றுலா சேவைகளை வழங்கும் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து ஹெலிகொப்டரில் தீப்பரவல் ஏற்பட்டதுடன், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.









