பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificates) விண்ணப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் திறம்படத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், வினவல்களை இலகுவாக்குவதற்கும் பொலிஸ் தலைமையகம் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இதற்கமைய, 2026 செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பிரிவுக்கு வட்ஸ்அப் (WhatsApp) மூலம் செய்திகளை அனுப்புவதற்காக விசேட புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய தொலைபேசி இலக்கம்: 071-8595950 (இந்த இலக்கம் வட்ஸ்அப் செய்திகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது)
விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை வட்ஸ்அப் செய்திகள் மூலம் அனுப்பவும், பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பிரிவுடன் செய்திகளைப் பரிமாறிக்கொண்டு வினவல்களைச் செய்யவும் இதன் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.








