1448 ஹிஜ்ரி ஆண்டுக்கான ஜுமாதல் ஆகிரா மாதத்திற்கான தலைப்பிறை தென்படாததால், ஜுமாதல் ஆகிரா மாதம் இன்று (11) புதன்கிழமை ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற தலைப்பிறை தொடர்பான தீர்மானக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில், பிறைக்குழுத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். ஹிஷாம் பதாஹி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். புர்ஹான், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் முப்தி முர்சி மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அண்மையில் காலமான மௌலவி எம்.எஸ்.எம். தஸ்லீம் அவர்களும் நினைவுகூரப்பட்டார். அவர் 17 ஆண்டுகளாக தலைப்பிறைத் தீர்மானக் கூட்டத்தில் சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்னாருக்காகப் பிரார்த்தனை செய்த அஷ்ஷெய்க் எம்.பி.எம். ஹிஷாம் பதாஹி, அன்னாருக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க வேண்டுமெனப் பிரார்த்தித்தார்.








