2025 ஜனவரி முதல் 2026 ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பின் ஊடாக 27,581.40 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, கொட்டாவையிலிருந்து மத்தள வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாகக் குறித்த காலப்பகுதியில் 11,486 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மீரிகமையிலிருந்து குருநாகல் வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக 7,282 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்க வரையான அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக 2,560.05 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இதன்படி, இந்த மூன்று அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக மாத்திரம் மொத்தமாக 21,328.05 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, வெளிச்சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாகக் குறித்த காலப்பகுதியில் 6,251 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைய, 2025 ஜனவரி முதல் 2026 ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பின் ஊடாக மொத்தம் 27,581.40 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.








