அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (23) மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.326.27 இலிருந்து ரூ.324.64 ஆகக் குறைந்துள்ளது.
அதேவேளை, டொலரின் விற்பனை விலை ரூ.335.28 இலிருந்து ரூ.333.70 ஆகக் குறைந்துள்ளது.
வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட சில முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.









