பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் முன் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (14) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மின்னல் தாக்கங்களினால் விபத்துகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








