இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் காரணமாக இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 2,146 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியான பதிவுகளின்படி, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,742 ஆகும்.
அதனைத் தொடர்ந்து, கொழும்பு மாவட்டத்தில் 19,235 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,291 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,247 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







